சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆண்டிபட்டி அருகே தனியார் பஸ் கவிழ்ந்து 37 பேர் காயம்

ஆண்டிபட்டி அருகே அரைபடிதேவன்பட்டியில் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில், அதில் பயணித்த 37 பேர் காயம்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 5:25 pm

ஆண்டிபட்டி அருகே அரைபடிதேவன்பட்டியில் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில், அதில் பயணித்த 37 பேர் காயம் அடைந்தனர்.

  செவ்வாய்க்கிழமை இரவு, மதுரையில் இருந்து தேனி நோக்கிச் சென்றது தனியார் பஸ். ஆண்டிபட்டி அருகே அரைபடிதேவன்பட்டியில் சென்று கொண்டிருந்த இந்த பஸ், திடீரென கட்டுப்பாட்டைப் இழந்து, சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

 இதில், பஸ்ஸில் பயணம் செய்த 2 வயது குழந்தை வைஷ்ணவி, தேனியைச் சேர்ந்த பொன்னான்டி (40), அதே ஊரைச் சேர்ந்த ரவி (45), அல்லிநகரத்தைச் சேர்ந்த சண்முகம் (55), ஓடைப்பட்டியைச் சேர்ந்த பாப்பாத்தி (40), அதே ஊரைச் சேர்ந்த பத்திரகாளி (42), வேல்ராஜ் (42), செல்வி (32) உள்ளிட்ட 37 பேர் காயம் அடைந்தனர்.

 காயமடைந்தவர்களை, 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இவர்கள் அனைவரும் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது சம்பந்தமாக, க.விலக்கு போலீஸார் வழக்குப் பதிந்து, பஸ் டிரைவர் முத்துக்குமாரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.