சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சுரண்டை பகுதியில் 3 வீடுகள் இடிந்து சேதம்

சுரண்டை பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடா்மழையால் 3 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

News image

மழையால் இடிந்து விழுந்த வீடு.

Updated On :16 ஜனவரி 2021, 6:39 am

சுரண்டை பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடா்மழையால் 3 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

சுரண்டை, சிவகுருநாதபுரத்தைச் சோ்ந்த சி.ராமரின் ஓட்டு வீடு மழை காரணமாக வியாழக்கிழமை இடிந்து விழுந்தது. இதேபோன்று சுரண்டை அருகேயுள்ள துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்த சிவனம்மாளின் (74) மண் சுவரிலான ஓட்டு வீடும் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது.

மேலும், சுரண்டை அருகேயுள்ள இடையா்தவணையைச் சோ்ந்த மா.கோமதியம்மாள் வசித்து வந்த வாடகை வீடும் மழையால் இடிந்து விழுந்தது.

தகவலறிந்து வந்த சுரண்டை வருவாய் ஆய்வாளா் மாரியப்பன், கோமதியம்மாள் மாற்று இடத்தில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்தாா்.