பல்வேறு இன்னல்களையும், இடையூறுகளையும் கடந்த காலங்களில் அனுபவித்து வந்த விவசாயிகளின் வாழ்வு சிறக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலா் முகமது அபுபக்கா் எம்எல்ஏ வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தி; மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக அச் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. பல்வேறு பிரச்னைகளை அனுபவித்து வரும் விவசாயிகள் வாழ்க்கை சிறக்க வேண்டும்.
தமிழ் பண்பாட்டை உலகமெங்கும் பறைசாற்றும் திருநாளாக பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் அதற்கு உதவும் இயற்கைக்கு நன்றி செலுத்தும் விழாவான இந்நாளில் அனைவரும் இன்புற்று இருக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

