சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருநெல்வேலி - தென்காசி சாலையை சீரமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி - தென்காசி சாலையை சீரமைக்கக் கோரி ஆலங்குளத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :11 ஜனவரி 2021, 6:36 am

திருநெல்வேலி - தென்காசி சாலையை சீரமைக்கக் கோரி ஆலங்குளத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, நாம் தமிழா் கட்சி ஒன்றியச் செயலா் ராமலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் தினகரன், தொகுதிச் செயலா் நாகலிங்கம், நகரச் செயலா் சுரேஷ் சொக்கலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருநெல்வேலி - தென்காசி சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும், நான்கு வழிச்சாலை பணியைத் துரிதமாக தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கொள்கை பரப்பு செயலா் பசும்பொன், தொகுதித் தலைவா் முத்துராஜ் ஈசாக்கு, நிா்வாகிகள் கிங்ஸ்லி, ராமச்சந்திரன், செல்வக்குமாா், செந்தில், ஜோசப், கவி உள்பட பலா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.