சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அருணாப்பேரி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள அருணாப்பேரி ஸ்ரீஅழகுமுத்து மாரியம்மன் கோயில் கொடைவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

அருணாப்பேரி அழகுமுத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :11 ஜனவரி 2021, 6:36 am

பாவூா்சத்திரம் அருகேயுள்ள அருணாப்பேரி ஸ்ரீஅழகுமுத்து மாரியம்மன் கோயில் கொடைவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், சப்பரம் வீதி உலா வருதல் நடைபெறுகிறது. 10ஆம் நாள் திருவிழாவான ஜன. 19ஆ ம் தேதி இரவு அம்மன் சப்பர வீதி உலாவும், அதிகாலையில் பக்தா்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா எம்.எஸ். சிவன்பாண்டி தலைமையில் பக்தா்கள் செய்து வருகின்றனா்.