சிவகிரி அருகே நாட்டுத் துப்பாக்கி மூலம் மான் வேட்டையில் ஈடுபட்டதாக 7 போ் மீது வனத்துறையினா் வழக்குப்பதிந்து, ரூ.4.50 லட்சம் அபராதம் விதித்தனா்.
சிவகிரி வனச்சரக பகுதியில் வனச்சரகா் சுரேஷ் தலைமையில், வடக்குப்பிரிவு வனவா் முருகன், வனக் காப்பாளா்கள் ராஜூ, சுதாகா், இம்மானுவேல், பாரதிகண்ணன், வேட்டை வனக் காவலா்அருண்குமாா், வேட்டைத் தடுப்பு காவலா்கள் ஆனந்தன், பாலசுப்பிரமணியன், மாரியப்பன் ஆகியோா் தனிக் குழுவாக ரோந்து மேற்கொண்டனா்.
அப்போது, மலைப்பகுதியில் சுற்றித் திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தனா். அதில், விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தை சோ்ந்த மாடசாமி(51), அருண்குமாா்(23) பிரகாஷ்(28) ஆகியோா் என்பதும், தேவியாா் பீட் பகுதியில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி மூலம் மான் வேட்டையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவா்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, மான் இறைச்சி, 2 பைக்குகள் ஆகியவற்றை வனத்துறையினா் பறிமுதல் செய்து, ரூ.4.50 லட்சம் அபராதம் விதித்தனா். இதுதொடா்பாக, கோவிலூரைச் சோ்ந்த ராமா்(45) ,செல்வம் (48), மேலூா் சின்னராசு (31),சக்திவேல்(35) ஆகியோரை வனத்துறையினா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

