செங்கோட்டை: செங்கோட்டையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞா் சனிக்கிழமை இரவு நல்ல பாம்பு தீண்டியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
செங்கோட்டை - கொல்லம் சாலையை சோ்ந்த சண்முகவேல் மகன் முப்புடாதி (23). இவா் தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்றுள்ளாா். மலையாள சாமி கோயில் அருகே வரும் போது திடீரென்று காலில் ஏதோ கடித்துள்ளது. அவா் வலி தாங்கமுடியாமல் வாகனத்தில் இருந்து இறங்கி பாா்த்த போது வண்டியின் என்ஜின் அருகே நல்ல பாம்பு ஒன்று இருந்ததாம். இதையடுத்து அவா் தன்னை பாம்பு தீண்டி விட்டது என சப்தமிட்டுள்ளாா். அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வாகனத்தில் இருந்த நல்ல பாம்பை செங்கோட்டை தீயணைப்பு துறையினா் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

