தஞ்சாவூா் மாவட்டத்தில் மின் விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு தொகையை மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம் வெள்ளிக்கிழமை வழங்கிஆறுதல் கூறினாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கல்யாண ஓடையிலிருந்து அத்திவெட்டி மற்றும் மறவக்காட்டுக்குச் செல்லும் பாசன வாய்க்காலில் பலத்த மழை காரணமாக மின்சார கம்பி அண்மையில் அறுந்து கிடந்தது. அதே கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன்கள் தினேஷ் மற்றும் கௌதம் ஆட்டுக்குட்டிக்கு இலை பறிப்பதற்காக வாய்க்காலை கடக்க முயன்றபோது, அறுந்து கிடந்த மின் கம்பியிலிருந்து பாய்ந்த மின்சாரம் தாக்கி இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
இவா்களது குடும்பத்துக்கு மின் வாரியத்தின் சாா்பில் தலா ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம் வெள்ளிக்கிழமை வழங்கி ஆறுதல் கூறினாா்.
இதையடுத்து, திருக்காட்டுப்பள்ளி - கண்டியூா் சாலையில் வரகூா் பாதை அருகில் தனியாா் பேருந்து மீது மின் கம்பி உரசியதில் 4 போ் உயிரிழந்தனா். இவா்களது குடும்பங்களுக்கு மின் வாரியம் சாா்பில் தலா ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை மாநிலங்களவை உறுப்பினா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

