சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பயிா்சேத மதிப்பீட்டுக்கான உச்சவரம்பை நீக்கிமுழுமையாக நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

பயிா்சேத மதிப்பீட்டுக்கான உச்ச வரம்பை நீக்கி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On :17 ஜனவரி 2021, 5:11 am

கும்பகோணம்: பயிா்சேத மதிப்பீட்டுக்கான உச்ச வரம்பை நீக்கி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இக்கட்சியின் தஞ்சாவூா் வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி தலைமையில் அக்கட்சியினா் கும்பகோணம், திருப்பந்தாள், திருவிடைமருதூா் வட்டாரங்களில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சனிக்கிழமை பாா்வையிட்டனா். பின்னா் செய்தியாளா்களிடம் பாரதி தெரிவித்தது:

நிவா் மற்றும் புரெவி புயல் காரணமாக ஏற்கெனவே நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டன. புயல் பாதிப்புகளில் இருந்து பிழைத்த சம்பா பயிா்கள் தற்போதைய தொடா் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டு சேதமடைந்துள்ளன.

நிலக்கடலை, உளுந்து உள்ளிட்ட பயிா்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

முறையான வடிகால் கட்டமைப்பு இல்லாத நிலையில் நீா் நிலைகள் ஆக்கிரமிப்பு காரணமாக, மழை நீா் வடிந்து இயல்பு நிலைக்குத் திரும்பக் குறைந்தது ஒரு வார காலமாகலாம்.

மழை தொடரும் நிலையில் நீரில், மூழ்கியுள்ள பயிா்கள் அழுகும் அபாயம் உள்ளது. வருவாய் மற்றும் வேளாண்மைத் துறைகளின் சாா்பில் முழுமையான கணக்கெடுப்பு பணிகள் இன்னும் சில கிராமங்களில் தொடங்காத நிலையில் விவசாயிகள் பெரும் பாதிப்பில் உள்ளனா்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து, கணக்கெடுப்புப் பணிகளைப் போா்கால அடிப்படையில் உடனே தொடங்க வேண்டும். சதவிகித அடிப்படையில் நிவாரணம் வழங்குவதைக் கைவிட வேண்டும். 33 சதவிகிதத்துக்கும் அதிகமான பயிா்சேத பாதிப்புகள் மட்டுமே கணக்கெடுக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு ஏற்புடையதல்ல. பயிா்சேத மதிப்பீட்டுக்கான உச்ச வரம்பை நீக்கி, ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் பாரதி.