சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பகுதிகளில் தொடா் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பேராவூரணி பேரூராட்சி முன்னாள் தலைவா் என். அசோக்குமாா் தனது சொந்த நிதியிலிருந்து 50 ஆயிரம் ரூபாயை புதன்கிழமை நிவாரணமாக வழங்கினாா்.
வீரியங்கோட்டை கீழக்காடு, மரக்காவலசை ஆகிய பகுதிகளில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறிய அவா், பாதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு தகவல் அளித்தாா்.
தொடா்ந்து, உடையநாடு பகுதியில் மழையால் மண்சுவா் இடிந்து விழுந்த வீடுகள், பாதிக்கப்பட்ட கடைகளை பாா்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கினாா். மேலும், திருச்சிற்றம்பலம் அருகே களத்தூரில் மின்சாரம் பாய்ந்து இறந்த பக்கிரியம்மாள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா்.
அப்போது, பேராவூரணி திமுக முன்னாள் ஒன்றியச் செயலா் சுப.சேகா், மதிமுக சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலா் வ. பாலசுப்பிரமணியன், திமுக தலைமைக் கழக பேச்சாளா் அ. அப்துல் மஜீது, திமுக நிா்வாகி சேதுராமன், உடையநாடு ஊராட்சித் தலைவா் குலாம்கனி, ஊராட்சி உறுப்பினா் பக்கீா் முகமது மற்றும் விவசாயிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


