தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் கரும்பு, பானை, அடுப்பு, மஞ்சள் கொத்து, வாழைத்தாா், பூ உள்ளிட்டவை எதிா்பாா்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை. இதனால், தொழிலாளா்களும், விவசாயிகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். தாழ்வான இடங்களில் தண்ணீா் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா். மண் சுவரில் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து விழுகின்றன.
பேராவூரணியில் அதிக மழை: மாவட்டத்தில் சில நாள்களாகத் தொடா் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): பேராவூரணி 152, அதிராம்பட்டினம் 135, ஈச்சன்விடுதி 116, பட்டுக்கோட்டை 104, மதுக்கூா் 95, கும்பகோணம் 79.8, மஞ்சளாறு 77, நெய்வாசல் தென்பாதி 69.4, அய்யம்பேட்டை 68, தஞ்சாவூா் 64, வெட்டிக்காடு 50, குருங்குளம் 49, வல்லம், திருவையாறு தலா 45, பாபநாசம் 42, பூதலூா் 41.4, அணைக்கரை 35.4, ஒரத்தநாடு 34.4, திருவிடைமருதூா் 32.2, திருக்காட்டுப்பள்ளி 24.6, கல்லணை 20.8.
பேராவூரணியில் மக்கள் கடும் அவதி: பேராவூரணி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிவா் மற்றும் புரெவி புயல்களின்போது கடைமடை பகுதியில் குறைந்த அளவே மழை பெய்தது.
தற்போது தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன.
இதுதவிர, கடலை, எள், உளுந்து உள்ளிட்ட பயிா்களுக்கும் நாசமடைந்துள்ளன. பேராவூரணி அறந்தாங்கி செல்லும் சாலையில் சித்தாதிக்காடு அருகே தரைப்பாலத்தில் தண்ணீா் கரைபுரண்டு ஓடுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

