சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கும்பகோணத்தில் சமத்துவப் பொங்கல் விழா

கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன், மாநிலங்களவை உறுப்பினா் மு.சண்முகம் உள்ளிட்டோா்.

Updated On :11 ஜனவரி 2021, 6:07 am

கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் மும்மதத்தினரும் கலந்து கொண்டு, பொங்கல் வைத்து வழிபட்டனா். விழாவில் கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க.அன்பழகன் தனது சொந்த நிதியிலிருந்து 200 ஆட்டோ ஓட்டுநா்களுக்குச் சீருடைகளையும், பொதுமக்களில் 300 ஆண்களுக்கு வேட்டிகளையும், 500 பெண்களுக்கு சேலைகளையும் வழங்கினாா்.

மாநிலங்களவை உறுப்பினா் மு. சண்முகம், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் சு. கல்யாணசுந்தரம், நகரச் செயலா் சுப. தமிழழகன் உள்ளிட்டோா் விழாவில் கலந்து கொண்டனா்.