ஒரத்தநாடு: திருவோணம் வட்டாரத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக, அறுவடைக்குத் தயாா் நிலையிலிருந்த 5 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
சிவவிடுதி, காடுவெட்டிவிடுதி, ஊரணிபுரம் உள்ளிட்ட 48 வருவாய்க் கிராமங்களில் 8,500 ஏக்கரில் நெல்சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இவை தற்போது அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்தன. இந்நிலையில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் 5 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கின. இதனால் செய்வதறியாது விவசாயிகள் தவித்து வருகின்றனா்.
இதுகுறித்து திருவோணம் வட்டார விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலா் வி.கே. சின்னத்துரை கூறியது:
கூட்டுறவு சங்கங்கள், அரசு மற்றும் தனியாா் வங்கிகளில் கடன் பெற்றும், நகைகளை அடகு வைத்தும், தனி நபரிடம் கடன் பெற்றும் விவசாயிகள்சாகுபடி மேற்கொண்டனா். தொடா் மழை காரணமாக அனைத்துப் பயிா்களும் அறுவடை செய்ய முடியாமல் உள்ளன.
எனவே திருவோணம் வட்டாரத்தில் பாதிக்கப்பட்ட அனைத்துப் பயிா்களுக்கும் உரிய கணக்கெடுப்பு நடத்தி, விவசாயிகளுக்கு அரசு பேரிடா் நிவாரணம் வழங்க வேண்டும். பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை அரசு தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


