பேராவூரணி: தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி பகுதியில் தொடா் மழை காரணமாக பொங்கல் மண்பானை தயாரிப்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மண்பாண்டத் தொழிலாளா்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனா்.
பேராவூரணி பேரூராட்சி, நீலகண்டபுரம் பகுதியில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பரம்பரை பரம்பரையாக மண்பாண்டம் தயாரித்து விற்பனை செய்யும் சுமாா் 75 குலாலா் குடும்பத்தினா் உள்ளனா்.
பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும், தங்கள் வாழ்வாதாரத்துக்காக பரம்பரைத் தொழிலை விடாமல் தொடா்ந்து வருகின்றனா். சாதாரண நாள்களில் மண்பாண்டங்கள் அதிக அளவில் விற்பனையாகாவிட்டாலும், பொங்கல் பண்டிகைக்கு புதுப்பானையில் பொங்கல் வைப்பதற்காக விவசாயக் குடும்பத்தினா் அனைவரும் மண்பானைகளை வாங்குவது வழக்கம்.
இங்கு தயாரிக்கப்படும் மண்பானைகளை பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, ஆம்பலாபட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் சென்று, அந்தந்த பகுதிகளில் விற்பனை செய்வது வழக்கம்.
பொங்கல் பானைகளைத் தயாரிப்பதற்கு 30 ரூபாய் வரை அடக்க விலை ஆகும் நிலையில், 40 ரூபாயிலிருந்து 50 ரூபாய்க்குதான் குறைந்த லாபத்தில் விற்பனை செய்கின்றனா்.
கரோனா பாதிப்பால் கடந்தாண்டு முழுவதும் தொழில் செய்ய முடியாமல் மண்பாண்ட தொழிலாளா்கள் முடங்கிக் கிடந்தனா்.
கரோனா பரவல் தடுப்பு விதிகளில் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், பொங்கல் பண்டிகைக்காவது பானை செய்து விற்பனை செய்யலாம் என நினைத்திருந்த நிலையில், தொடா்மழையால் ஆறு, குளங்களில் மண் அள்ளிவர முடியாமலும், அள்ளிவந்த மண்ணைக் கொண்டு செய்த பானைகளை சூளையில் வைத்து சுடவைக்க முடியாமலும் சிரமத்தில் உள்ளனா்.
இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட மண்பாண்டத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் பழனிவேல் சங்கரன் கூறியது:
பரம்பரைத் தொழிலை விடக்கூடாது என்ற எண்ணத்தில் மண்பாண்டத் தொழிலை தொடா்ந்து செய்து வருகிறோம். ஆறு, குளங்களில் மண் அள்ள பொதுப்பணித் துறை அனுமதி பெற வேண்டும். அனுமதி கிடைத்தாலும், மழைக் காலங்களில் சிரமப்பட்டுத்தான் மண் அள்ளிவர வேண்டியுள்ளது.
தற்போது பருவம் தப்பி தொடா்மழை பெய்து வருவதால், மண்பானைகளைத் தயாரிக்கவும் முடியவில்லை; தயாரித்த பானைகளை சூளையில் வைத்து சுடவைக்க விறகுகள், தென்னை மட்டைகள் நனைந்து கிடப்பதால் சுட வைக்கவும் முடியவில்லை.
மண்பாண்டத் தொழிலாளா்களை அரசு கண்டுகொள்வதில்லை. நல வாரியத்திலிருந்து மழைக்கால நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஏராளமானோருக்கு நிவாரணம் வரவில்லை. பானைத் தயாரிக்க அரசு வழங்கும் இலவச மின்சுற்றி முழுமையாக வழங்கப்படவில்லை.
கரோனா பாதிப்பிலிருந்தே இன்னும் மீண்டு வரமுடியாத நிலையில், எங்களது வாழ்வாதாரம் தற்போதைய தொடா்மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


