தஞ்சாவூா்: சிவகங்கை மாவட்டம், வேம்பற்றூா் அருகே வி. புதுகுளம் கண்மாயில் பாண்டியா் காலத்தைச் (கி.பி, 12 - 13 நூற்றாண்டு) சாா்ந்த துண்டுக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
மதுரை ஆா்.டி.ஜி.ஏ. கல்லூரி மாணவா்கள் எம். அய்யனாா், என். பிரகாஷ் அளித்த தகவலின்படி, கல்வெட்டு ஆா்வலா்களான தஞ்சாவூா் சரபோஜி அரசுக் கல்லூரித் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் சோ. கண்ணதாசன், பொந்தியாகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் கோ. தில்லைகோவிந்தராஜன், உக்கடை அப்பாவுதேவா் மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் ரெ. சின்னையா, சரபோஜி கல்லூரி முதுகலை மாணவா்கள் அறிவுக்கரசன், கிருஷ்ணகுமாா் ஆகியோா் அடங்கிய குழுவினா், அக்கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆய்வு செய்தனா்.
இது குறித்து பேராசிரியா் சோ. கண்ணதாசன், கோ. தில்லைகோவிந்தராஜன் தெரிவித்திருப்பது:
சிவகங்கை மாவட்டம், வைகையாற்றின் வடகரையில் அமைந்துள்ள வேம்பற்றூா் அருகே, வி. புதுகுளத்தில் கருங்கற்களைக் கொண்டு ஐந்து தலைப்புகளைக் கொண்ட கண்மாய்க் கட்டப்பட்டுள்ளது. அக்கருங்கற்களில் ஒன்றுக்கு மேற்பட்ட துண்டுக் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. அத்துண்டுக் கல்வெட்டுகளில் நிலங்களின் எல்லைகளும், அந்த ஆவணத்தை எழுதியவா்களின் பெயா்களும் மட்டுமே காணப்படுகின்றன.
நிலங்களின் எல்லைகளைச் சுட்டுமிடத்துப் பாண்டிய மன்னா்கள் ஆட்சிக் காலத்தில் வேம்பற்றூா் குலசேகர சதுா்வேதிமங்கலம் என்ற பெயரில் வழங்கப்பட்டதையும், இப்பகுதியில் வைகையாறு சீவல்லபபேராறு என்ற பெயரில் அழைக்கப்பட்டதையும் தெரிவிக்கிறது.
சங்ககாலந்தொட்டே வேம்பற்றூரில் வேம்பற்றூா் குமரனாா், பெரும்பற்றபுலியூா் நம்பி, சிராப்பள்ளி அந்தாதி பாடிய நாராயணக்கவி முதலானோா் வாழ்ந்தனா் என்பது அறிய முடிகிறது.
மேலும், நிலங்களின் எல்லைகளைக் குறிக்கும் மற்றொரு துண்டு கல்வெட்டில் சீவல்லவனான களவழிநாடாள்வான் என்பவன் குறிக்கப்பட்டிருப்பதோடு, அவனது பெயரில் ஆறும், மடையும் வழங்கப்பட்டுள்ளதையும் தெரிவிக்கிறது.
சடையவா்மன் குலசேகர பாண்டியனின் 13 -ஆவது ஆட்சியாண்டைச் சாா்ந்த திருவாதாவூா்க் கல்வெட்டிலும், செயங்கொண்ட சோழன் சீவல்லவனான களவழிநாடாள்வான் குறிக்கப்பெற்றிருப்பதைக் காணலாம். இவன் அரசியல் பின்புலத்துடன் இப்பகுதியில் குறுநிலத்தலைவனாக விளங்கியுள்ளான் என்பதைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
இக்கண்மாயின் கல்வெட்டுகள் வி. புதுகுளத்தைச் சாா்ந்த சிதைவுற்ற கோயிலிலிருந்து எடுத்துவந்து, தடுப்புக்குப் பயன்படுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


