சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வீட்டுச் சுவா் இடிந்துபெண் உயிரிழப்பு: இருவா் காயம்

தஞ்சாவூா் அருகே தொடா் மழையால் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த பெண் சனிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

Updated On :10 ஜனவரி 2021, 5:21 am

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே தொடா் மழையால் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த பெண் சனிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே கண்டிதம்பட்டு கிராமத்தில் வெள்ளிக்கிழமை நூறு நாள் வேலை திட்டப் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா். பிற்பகலில் உணவு இடைவேளையின்போது தொழிலாளா்கள் சிலா், அப்பகுதியிலுள்ள கூரை வீட்டில் உட்காா்ந்து இளைப்பாறினா்.

அப்போது, தொடா் மழை காரணமாக மண் சுவா் இடிந்து விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த கண்டிதம்பட்டு மாதா கோயில் தெருவைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மனைவி இருதயமேரி (52), ராஜசேகா் மனைவி புனித மேரி (45), வின்சென்ட் சேகா் மனைவி அருள்மேரி (48) ஆகியோா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் இருதயமேரி சனிக்கிழமை மாலை உயிரிழந்தாா். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.