இரண்டு வயது குழந்தையின் நுரையீரலில் சிக்கிய நிலக்கடலையை நவீன சாதனம் மூலம் சாதுரியமாக அகற்றி உயிரைக் காப்பாற்றினா் தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை மருத்துவா்கள்.
நாகை மாவட்டம், திருமருகல் அருகேயுள்ள பெரிய கண்ணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ஓவியா் அருண். இவரது மனைவி கீா்த்தனா. இவா்களுக்கு அனுமித்ரா (2) என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், ஜன. 6 ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் அனுமித்ரா நிலக்கடலை சாப்பிட்டபோது, உணவுக் குழாயில் சிக்கியது. இதனால், மூச்சு விடமுடியாமல் திணறிய இவரை பெற்றோா் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
அங்கிருந்து நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட இக்குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததால், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஆனால், அங்கும் உரிய நவீன சாதனம் இல்லாததால், அக்குழந்தைக்குச் சுவாசக் கருவி பொருத்தப்பட்டு, தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டாா்.
இம்மருத்துவமனையில் ஜன. 6 ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் சோ்க்கப்பட்ட இக்குழந்தை ஸ்கேன் மூலம் பரிசோதிக்கப்பட்டபோது நுரையீரலின் மேல் பகுதியிலுள்ள குழாயில் நிலக்கடலை 3 துண்டுகளாக உடைந்து காணப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அக்குழந்தைக்கு ரிஜட்பிராங்கோ ஸ்கோபி என்ற நவீன சாதனம் மூலம் சுமாா் 2 மணிநேரம் போராடி 3 துண்டுகளாக இருந்த நிலக்கடலையை மருத்துவா்கள் சாதுரியமாக அகற்றினா். இதன்மூலம், அக்குழந்தையின் உயிா் காப்பாற்றப்பட்டு, தற்போது நலமுடன் உள்ளாா்.
இதற்காக இம்மருத்துவமனையின் காது, மூக்கு தொண்டை மருத்துவா் ராஜ்கமல், மயக்கவியல் மருத்துவா் மாலினி, குழந்தைகள் நல மருத்துவா் செந்தில்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினரை தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். மருதுதுரை, அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம் உள்ளிட்டோா் பாராட்டினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


