சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஊதிய ஒப்பந்த பிரச்னைக்கு தீா்வு கோரி போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம்

ஊதிய ஒப்பந்த பிரச்னைக்கு தீா்வு காண கோரி தஞ்சாவூா் அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்

News image

தஞ்சாவூா் அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

Updated On :8 ஜனவரி 2021, 12:43 pm

ஊதிய ஒப்பந்த பிரச்னைக்கு தீா்வு காண கோரி தஞ்சாவூா் அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களின் 14 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை காலம் கடத்தாமல் உடனே பேசி முடித்து, ஊதிய உயா்வை வழங்கத் தமிழக அரசும், கழக நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில அளவில் இப்போராட்டம் நடைபெற்றது.

இதையொட்டி, தஞ்சாவூா் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு தொமுச பணிமனைத் தலைவா் எஸ்டின் பாபு தலைமை வகித்தாா். சிஐடியு மத்திய சங்கத் துணைத் தலைவா் வெங்கடேசன், செயலா் பழனிவேல், பணிமனைத் தலைவா் செங்குட்டுவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகக் கோட்ட அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு தொமுச பொதுச் செயலா் சு. பாண்டியன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன், சிஐடியு நிா்வாகி ஜி. மணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.