கும்பகோணம் அருகே விலையில்லா பொருள்கள் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
நீரத்தநல்லூர் ஊராட்சியில் நீரத்தநல்லூர், காவற்கூடம் ஆகிய கிராமங்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால் மேலாத்துகுறிச்சி கிராமத்தில் உள்ள 361 பேருக்கு மட்டும் பலமுறை கேட்டும் அவை வழங்கப்படவில்லையாம்.
இந்நிலையில் நீரத்தநல்லூர் ஊராட்சியில் புதன்கிழமை காலை நடைபெற்ற
மனுநீதி நாள் முகாமுக்கு வந்திருந்த மேலாத்துகுறிச்சி கிராமமக்கள் இதுகுறித்து முணுமுணுத்துக் கொண்டிருந்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் முகாம் உடனடியாக முடிந்துவிட்டதால் தங்களுடைய கிராமத்தை அதிகாரிகள் புறக்கணித்துவிட்டதாகக் கூறி நீரத்தநல்லூர் கடைவீதியில் மேலாத்துக்குறிச்சி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த கும்பகோணம் கோட்டாட்சியர் சங்கரநாராயணன்,வட்டாட்சியர்
ஸ்ரீ மாதவன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது,
அதிகாரிகளையும் கிராம மக்கள் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.
அதற்கு அதிகாரிகள் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். அடுத்தகட்டமாக விலையில்லாப் பொருட்கள் வழங்கும்போது மேலாத்துகுறிச்சிக்கு முன்னுரிமை கொடுத்து வழங்கப்படும் என்றனர்.
இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் கும்பகோணம் - சென்னை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

