தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள நீரத்தநல்லூரில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 198 பயனாளிகளுக்கு ரூ. 21 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அரசுப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு ஊராட்சித் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். முகாமில் தேவனாஞ்சேரி சரகத்தைச் சேர்ந்த கடிச்சம்பாடி, கொத்தங்குடி, நீரத்தநல்லூர், தேவனாஞ்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் முதியோர் ஓய்வூதியம், புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல், குடும்ப அட்டைகளில் திருத்தம், விதவை ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
முகாமில் 60 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சத்திலான வீட்டு மனைப்பட்டா, 135 பேருக்கு திருமண உதவி, இறப்பு குடும்ப நலநிதி, நலிந்தோர் நலத்திட்டம், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 18 லட்சம் நிதி உதவி, மூவருக்கு பட்டா மாற்றம் ஆணை ஆகியவை வழங்கப்பட்டன.
முகாமில் தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ்குமார், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத் திட்ட அலுவலர் சண்முகநாதன், ஆர்டிஓ சங்கரநாராயணன், வட்டாட்சியர் ஸ்ரீமாதவன், தனி வட்டாட்சியர்கள் வாசுதேவன், பிரபாகரன், பாண்டியன் மற்றும் கொத்தங்குடி, கடிச்சம்பாடி, தேவனாஞ்சேரி ஊராட்சித் தலைவர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

