சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மத்திய கால விதை நெல் ரகங்களைப் பயிரிட அறிவுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆக. 23-ம் தேதிக்குப் பிறகு மத்திய கால விதைநெல் ரகங்களைப் பயன்படுத்தி

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:41 pm

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆக. 23-ம் தேதிக்குப் பிறகு மத்திய கால விதைநெல் ரகங்களைப் பயன்படுத்தி பயிரிடுமாறு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வேளாண் துறை இணை இயக்குநர் ஜெ. சேகர் தெரிவித்தது:

தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ் சம்பா பருவத்தில் 1.17 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பா பருவத்துக்குத் தேவையான நீண்டகால ரகமான சாவித்திரி விதைகள் (சி.ஆர். 1009) வேளாண் விரிவாக்க மையங்களிலிருந்து 415 மெட்ரிக் டன்களும், தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 750 மெட்ரிக் டன்களும் இதுவரை விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், மத்திய கால ரகமான பி.பி.டி. 5204 தனியார், கூட்டுறவு சங்கங்களில் 505 மெட்ரிக் டன்களும், ஆடுதுறை 46 வேளாண் விரிவாக்க மையங்களில் 110 மெட்ரிக் டன்களும் இருப்பு வைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்படுகின்றன.

ஆக. 23-க்குப் பிறகு நீண்டகால ரகங்களை நாற்று விட்டு பயிரிட்டால் வடகிழக்கு பருவ மழை தீவிரமடையும் நேரத்தில் நவம்பர் மாதத்தில் நெல் பயிர் பூக்கும் பருவத்தை அடையும்போது பூக்கள் உதிர்ந்து மகசூல் பாதிக்கப்படும். எனவே, விவசாயிகள் நீண்டகால ரகங்களைத் தவிர்த்து, மத்திய கால ரகங்களான ஆடுதுறை 46, பி.பி.டி. 5204, ஆடுதுறை 38, ஆடுதுறை 39 ஆகிய ரகங்களைப் பயிரிட்டு பயனடையலாம். மத்திய கால விதை நெல் ரகங்கள் 1,350 மெட்ரிக் டன்கள் வேளாண் விரிவாக்க மையங்கள், தனியார், கூட்டுறவு சங்கங்களில் இருப்பில் உள்ளன.