சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

"திட்டமிட்டபடி ஆக.27-ல் தஞ்சையில் ரயில் மறியல்'

தஞ்சாவூரில் திட்டமிட்டப்படி ஆக. 27-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் எனப் போராட்டக் குழு

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:42 pm

தஞ்சாவூரில் திட்டமிட்டப்படி ஆக. 27-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் எனப் போராட்டக் குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து போராட்டக் குழுவைச் சேர்ந்த மதிமுக மாவட்டச் செயலர் கோ. உதயகுமார் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூர் - சென்னைக்கு அறிவிக்கப்பட்ட புதிய விரைவு ரயிலை உடனடியாக இயக்க வேண்டும். தஞ்சாவூரிலிருந்து மற்றும் தஞ்சாவூர் வழியாக முன்பு இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தையும் மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் தஞ்சாவூரில் ஆக. 27-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளன.

இந்நிலையில், தஞ்சாவூருக்கு வந்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ர புதிய ரயில் விரைவில் விடப்படும் எனத் தெரிவித்துள்ளார். திட்டவட்டமாக தேதியும் அறிவிக்கவில்லை.

தஞ்சாவூர் - சென்னை இடையே புதிய ரயில் இயக்குவதற்கு முன்பே மலைக்கோட்டை விரைவு ரயிலை நிறுத்த அவசரமாக முடிவு செய்யப்பட்டது ஏன் என்றும், முன் பதிவு ஏன் நிறுத்தப்பட்டது என்பது குறித்தும் விளக்கம் ஏதும் தெரிவிக்கவில்லை. மற்ற கோரிக்கைகள் குறித்தும் பொறுப்பான பதில் அளிக்காமல் ரயில்வே நிர்வாகம் பிடிவாத நிலையிலேயே உள்ளது. சென்னைக்கு செல்வோர் முன்பதிவு செய்யும் உரிமை முற்றிலுமாகப் பறிக்கப்பட்டுவிட்டது. இது பயணிகளுக்கு மிகுந்த கஷ்டத்தை உருவாக்கியுள்ளது.

கோரிக்கைகள் குறித்து பொதுமேலாளரின் கருத்துகள் திருப்திகரமாக இல்லாததால், திட்டமிட்டப்படி ஆக. 27-ம் தேதி ரயில் மறியல் நடைபெறுகிறது.