சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குடந்தையில் பௌர்ணமி தீர்த்த வலம் வரும் நிகழ்ச்சி

கும்பகோணம் மகாமகக் குளத்தைச் சுற்றி பெüர்ணமி தீர்த்த வலம் வரும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:26 pm

கும்பகோணம் மகாமகக் குளத்தைச் சுற்றி பெüர்ணமி தீர்த்த வலம் வரும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

கும்பகோணத்தில் புனிதக் குளமாக போற்றப்படும் மகாமகக் குளத்தில் மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமன்றும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாமக தினத்தன்றும் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

இந்தர் குளத்தை பௌர்ணமி தினத்தில் தீர்த்த வலம் வந்தால் சாந்தம், அமைதி நிலவி, பகைமை அகன்று, சுபிட்சம் மலரும் என்பதால் சேக்கிழார் மன்றத்தின் சார்பில் தீர்த்த வலம் வர முடிவு செய்யப்பட்டது.

அதன்படி செவ்வாய்க்கிழமை மாலை ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு மகாமக குளத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தீர்த்த வலம்வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத் தலைவர் திருவடிக்குடில் சுவாமிகள்  தலைமையேற்று சிவபுராணத்தை பாடி வழிநடத்தினார். இதில் சேக்கிழார் மன்ற நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பாலசுப்பிரமணியன், தீபிகாசெல்வராஜ், ராமகிருஷ்ணன், கல்யாணசுந்தரம், முனைவர் செல்வசேகரன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மகாமகக் குளத்தை 3 முறை வலம் வந்தனர்.