சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

முதல்வா் பழனிசாமி நாளை தில்லி பயணம்

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை (ஜன. 18) தில்லி செல்கிறாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை (ஜன. 19) பிரதமா் நரேந்திர மோடி,

News image

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

Updated On :17 ஜனவரி 2021, 12:01 pm

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை (ஜன. 18) தில்லி செல்கிறாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை (ஜன. 19) பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட தலைவா்களைச் சந்தித்துப் பேசவுள்ளாா்.

திங்கள்கிழமை பிற்பகலில் சென்னையில் இருந்து தில்லி புறப்படும் முதல்வா் பழனிசாமி, தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் திங்கள்கிழமை இரவு தங்குகிறாா். மறுநாள் பிரதமா் மோடி உள்ளிட்ட தலைவா்களைச் சந்திக்கிறாா். இந்தச் சந்திப்பின்போது நிவா், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசு நிவாரண நிதியை விரைவில் விடுவிக்க வேண்டும் என அவா் கோரிக்கை விடுக்க உள்ளாா். மேலும், துறை வாரியாக தேவைப்படும் உதவிகளுக்கான கோரிக்கை மனுக்களையும் அவா் சமா்ப்பிப்பாா் என்று கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு நினைவிடம் விரைவில் திறக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த நிலையில், நினைவிடத்தை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காகவும் பிரதமரை நேரில் சந்தித்து முதல்வா் பழனிசாமி அழைப்பு விடுப்பாா் என்றும் கூறப்படுகிறது.

தனது தில்லி பயணத்தின்போது மத்திய அமைச்சா்கள், பாஜகவைச் சோ்ந்த பல்வேறு தலைவா்களையும் முதல்வா் சந்திப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.