சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்யக்கூடும். 19 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை விலகுவதற்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் பகுதிவரை நீடிப்பதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 20-ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை அடுத்த 2 நாள்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
வடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் இருந்து வரும் 19-ஆம் தேதி விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


