பவானி: பவானியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழா அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
பவானி தேவபுரத்தில் நடைபெற்ற விழாவுக்கு நகரச் செயலாளர் என்.கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, அதிமுக கொடியேற்று விழா நகரின் 27 வார்டுகளிலும் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.
இதேபோன்று, கவுந்தப்பாடி, ஜம்பை, தளவாய்பேட்டை, புன்னம் உள்பட பல்வேறு பகுதிகளில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
பவானி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பூங்கோதை வரதராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கே.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


