சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிமுக மேற்கு ஒன்றியத்தின் சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜா, அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.வெங்கடாஜலம் ஆகியோர் தேவூர் மேற்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில் எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்தனர். பின்னர் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.வெங்கடாஜலம் காவேரிப்பட்டி அருகே உள்ள வட்ராம்பாளையத்தில் உள்ள எம்.ஜி.ஆர் முழு உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேவூர் அருகே உள்ள காவேரிப்பட்டி, வட்ராம்பாளையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கே.வெங்கடாஜலம் ஞாயிற்றுக்கிழமை மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
அதனையடுத்து அவர் அரசிராமணி குள்ளம்பட்டி, செட்டிப்பட்டி, புள்ளாகவுண்னம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
மேற்கு ஒன்றியச் செயலர் சுந்தர்ராஜன், கிழக்கு ஒன்றிய துணைச்செயலர் மருதாஜலம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் ஏ.பி.சிவக்குமாரன், தங்காயூர் ஊராட்சி மன்றத்தலைவர் பாலாஜி, நிர்வாகிகள் குருசாமி, காளியப்பன், அரசு வழக்குரைஞர் ஆர்.சுப்ரமணி, சங்ககிரி இளைஞரணி நிர்வாகி கார்த்தி, மோகனராஜா, உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


