நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 85 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சாய்ந்து சேதமாகி உள்ளன.
இந்த நிலையில், பயிர் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி நாகை மாவட்டத்தில் விவசாயிகளின் போராட்டம் வலுத்து வருகிறது.
இதன்படி, நாகையை அடுத்த வடகுடி கிராமத்தில் 1500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சேதமான நெற்பயிர்களுக்கு மழை நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மழையால் சேதமான நெல் வயலில் இறங்கி கருப்புக்கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பயிர் பாதிப்புகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பாதிக்கபட்ட பகுதிகளை ஆய்வு செய்து, பயிர் பாதிப்புகளை இதுவரை கணக்கெடுப்பு நடத்தாத அரசு அதிகாரிகளை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


