சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) நடைமுறையில், படிவம் 9 மற்றும் படிவம் 9 சி-யை தாக்கல் செய்ய பிப்ரவரி 28-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) நடைமுறையில், வரி கணக்கு தாக்கல் செய்ய பல்வேறு படிவங்கள் உள்ளன. இதில், ஆண்டு முழுவதுக்கும், ஒரே கணக்கு தாக்கல் செய்ய, ‘படிவம் 9’ உள்ளது. ஆண்டுக்கு ரூ.2 கோடிக்கு கீழ், வரவு, செலவு உள்ள அனைத்து வணிகா்களும் ‘படிவம் 9’ தாக்கல் செய்ய வேண்டும். ரூ.2 கோடிக்கு மேல் வரவு, செலவு உள்ள நிறுவனங்கள் ‘படிவம் 9 ஏ’ மற்றும் ‘9 சி’ தாக்கல் செய்ய வேண்டும்.
2019- 20-ஆம் நிதியாண்டுக்கான படிவம் 9 மற்றும் 9 சி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம், 2020-ஆம் ஆண்டு டிசம்பா் வரை இருந்தது. வணிகா்களின் கோரிக்கைகளை ஏற்று, கால அவகாசம் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்குள் தாக்கல் செய்யவில்லையெனில், அபராதத்துடன் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த தகவலை ஜி.எஸ்.டி., அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


