சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கரோனா தடுப்பூசி தொடர்பான அச்சம் காலப்போக்கில் நீங்கும்: முதல்வர்

கரோனா தடுப்பூசி தொடர்பாக மக்களிடம் எழுந்துள்ள அச்சம் காலப்போக்கில் நீங்கும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

News image

முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி (கோப்புப்படம்)

Updated On :16 ஜனவரி 2021, 5:18 pm

கரோனா தடுப்பூசி தொடர்பாக மக்களிடம் எழுந்துள்ள அச்சம் காலப்போக்கில் நீங்கும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்து பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்:

அப்போது பேசிய அவர், கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள நானும் தயாராகவுள்ளேன். முதலில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் கரோனா தடுப்பு மருந்து கண்டறியப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது:

தமிழகத்தில் முதல்முதலாக கரோனா தடுப்பூசியை போட்டுக்கொணவர்கள் மருத்துவர்கள். அதனால் கரோனா தடுப்பூசி தொடர்பான அச்சம் வேண்டாம்.

நாட்டை பாதுகாக்க அனைவரும் கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி தொடர்பான அச்சம் விலகும்:

மக்கள் மத்தியில் தொடக்கத்தில் கரோனா தடுப்பூசி  தொடர்பாக அச்சம் இருந்தாலும் காலப்போக்கில் அது நீங்கும்.

உரிய பரிசோதனைகளுக்குப் பிறகே தடுப்பூசிக்கு ஒப்புதல அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 226 இடங்களில் ஒத்திகை செய்து 166 இடங்களில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது என்று கூறினார்.