ஸ்ரீபெரும்புதூர்: வைப்பூர் ஊராட்சியில் காணும் பொங்கலை முன்னிட்டு அப்பகுதி பொதுமக்கள் சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வசந்திசந்தானம் பரிசு பொருள்கள் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குள்பட்ட வைப்பூர் பகுதியில் காணும் பொங்கலை முன்னிட்டு அப்பகுதி பொதுமக்கள் சார்பாக சமத்துவ பொங்கல் விழா அப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
இதையடுத்து பெண்களுக்கான உரியடி, கோலப்போட்டி, கயிறு இழுத்தல், மியூசிக் சேர் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும், ஆண்களுக்கு கிரிக்கெட், ஓட்டப்பந்தயம், உறியடித்தல், கயிறு இழுத்தல், வாலிபால் போட்டிகள் ஆகிய நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன.
இதில் வைப்பூர் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் வசந்திசந்தானம் கலந்துக்கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கினார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


