புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் வே. நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
உலகின் மிகப்பெரிதான கரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி சனிக்கிழமை காலை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த தொடக்க நிகழ்வின்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களில் தடுப்பூசி போடும் மொத்தம் உள்ள மூவாயிரத்து ஆறு மையங்களும் இணையவழியில் இணைக்கப்பட்டது.
இதையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் வே. நாராயணசாமி தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் 8 மையங்களில் இந்த கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
முதற்கட்டமாக மருத்துவர், செவிலியர் உள்பட சுகாதார பணியாளர் 21,820 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாள்களில் மட்டும் கரோனா தடுப்பூசி போடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


