மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த பணியாளர்கள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன்கொண்ட 4 அலகுகளும், இரண்டாவதுபிரிவில் 600 மெகாவாட் திறன்கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் தற்போது முதல் பிரிவில் இரண்டு அலகுகளில் மட்டும் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இரண்டாவது பிரிவில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் 240 தொழிலாளர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தனர். தற்போது அந்த ஒப்பந்தம் வேறு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதனால் 240 தொழிலாளர்கள் பணிபுரிய ஜனவரி 17 ஆம் தேதி வரை காலக்கெடு இருந்தும் வெள்ளிக்கிழமை முதல் அவர்கள் அனல்மின் நிலையத்திற்க உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இதனால் பொங்கல் தினத்தில் தொழிலாளர்கள் மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு எதிரே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கங்களும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டன.
இப்பிரச்னைக்கு மேட்டூர் அனல் மின்நிலைய நிர்வாகம் உடனடியாக தீர்வு காணாவிட்டால் முதல் பிரிவில் உள்ள தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


