ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவா்கள் வெள்ளிக்கிழமை ஐந்தாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து அண்மையில் மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவா்களை, ஒரு விசைப்படகுடன் இலங்கை கடற்படையினா் சிறைபிடித்துச் சென்றனா். இதனைக் கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள 49 மீனவா்கள் மற்றும் 7 விசைப்படகுகளை மத்திய, மாநில அரசுகள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி திங்கள்கிழமை முதல் மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்த போராட்டம் வெள்ளிக்கிக்கிழமை இரண்டாவது நாளாக தொடருகிறது. ஜன.23 ஆம் தேதி படகுகளில் கருப்பு கோடி ஏற்றிக்கொண்டு கச்சத்தீவை நோக்கிய பயணம் செல்ல உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் 6 ஆயிரம் மீனவா்கள் மற்றும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளா்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


