இராஜபாளையம் தனியார் தங்கும் விடுதியில் கோயம்புத்தூரைச் சேர்ந்த தம்பதியினர் உள்பட 3 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து வடக்கு காவல் நிலைய காவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் குருவையாராஜா தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தன ராஜா (வயது 65 ). பல ஆண்டுகளுக்கு முன்பே கோயம்புத்தூர் பகுதியில் நிரந்தரமாக குடியேறியுள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.
கரோனா காலத்தில் கோயம்புத்தூரில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இராஜபாளையத்தில் குருவுராஜா தெருவில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு ஜனார்ந்தன ராஜா, இவரது மனைவி கலாவதி (வயது 45 ) மகன் சித்தார்த் (17வயது ) மூவரும் உறவினர் வீட்டுக்கு வந்த நிலையில் இராஜபாளையம் மருத்துவமனை ரோட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கி உள்ளனர்.
இதில் 3 பேரும் விஷம் அருந்தியது விடுதி ஊழியர்களுக்கு தெரிய வந்ததை அடுத்து மூன்று பேரையும் காப்பாற்றி இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனர். அதற்குள் சிறுவன் சித்தார்த் விடுதியிலே உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஜனார்த்தனா ராஜா மற்றும் இவரது மனைவி கலாவதி இருவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கலாவதி உயிரிழந்தார். ஜனார்த்தன ராஜா இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜபாளையம் பகுதியில் உறவினர்கள் இருக்கும் நிலையில் இவர்கள் ஏன் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்? தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


