காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ராஜகுபேரன் கோயிலில் வெள்ளிக்கிழமை மாட்டுப் பொங்கலை முன்னிட்டு 18 பசுக்களுக்கு கோ பூஜை நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன.
காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் அமைந்துள்ள ராஜகுபேரன் திருக்கோயிலில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து தீபாராதனைகளும் நடந்தன.
இதனைத் தொடர்ந்து 18 பசுக்களுக்கும் அதன் கன்றுகளுக்கும் ஆலயத்தின் முன்பாக அழைத்து வரப்பட்டு அவற்றுக்கு சந்தனம், குங்கும், திலகமிட்டு மாலைகள் அணிவித்து சிறப்பு தீபாராதனைகள் நடந்தன.
கோயில் நிர்வாக அறங்காவலர் ராஜகுபேர சித்தர் சுவாமிகள் கோ பூஜைக்கான சிறப்பு பூஜைகளை நடத்தினார். பின்னர் அனைத்து பசுக்களுக்கும், கன்றுகளுக்கும் பொங்கல், பழம் ஆகியனவும் வழங்கப்பட்டது. சதாசிவம் குழுவினரின் இன்னிசைக்கச்சேரியும் நடைபெற்றது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


