பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து வெள்ளிக்கிழமை அதிகாலை தாய், மகள் உயிரிழந்தனர்.
பட்டுக்கோட்டை வட்டம், வீரக்குறிச்சி வடக்குத் தெருவில் குடும்பத்துடன் வசிப்பவர் விவசாயி அந்தோணிசாமி (43). பக்கத்திலுள்ள இவரது இடத்தில் போடப்பட்டுள்ள குடிசை வீட்டில் அந்தோணிசாமியின் சகோதரி மேரி (45), அவர் கணவர் விவசாயி வரப்பிரசாதம் (50), மகள்கள் உதயா (20), நிவேதா (18) வசித்து வந்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை தொடர் மழையால் ஊறிப்போயிருந்த மேரியின் தம்பி அந்தோணிசாமி வீட்டுச் சுவர் இடிந்து மேரி வீட்டுச் சுவற்றில் விழுந்துள்ளது. அடுத்த கணமே மேரி வீட்டுச் சுவரும் இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மேரி, 2-வது மகள் நிவேதா இருவரும் இடிபாட்டில் சிக்கி அதேயிடத்தில் உயிரிழந்தனர். நிவேதா தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு டிப்ளமோ மாணவி ஆவார்.
விபத்தில் லேசான காயமடைந்த மூத்த மகள் உதயா பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். வரப்பிரசாதம் காயமின்றி உயிர்தப்பினார்.
இதுகுறித்து வரப்பிரசாதம் அளித்த புகாரின்பேரில் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


