தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஞானதேசிகன் உடல் நாளை (ஜன.16) தகனம் செய்யப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்த பி.எஸ். ஞானதேசிகன், உடல் நலக் குறைவு காரணமாக கடந்த நவம்பர் 11-ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஜன. 15) அவர் காலமானார்.
அவரது மறைவுக்கு ஏராளமான கட்சித் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே ஞானதேசிகன் உடல் நாளை தகனம் செய்யப்படவுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஞானதேசிகன் மறைவையொட்டி 3 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
துக்கம் அனுசரிக்கும் விதமாக கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


