திருச்சி: திருச்சி அருகே அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் ஓலையூர் கிராமத்தில் மழையின் காரணமாக விளைந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்ததை இதுவரை அதிகாரிகள் யாரும் வந்து பார்க்காத காரணத்தினால் ஓலையூர் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஓலையூர் மற்றும் திருமலைசமுத்திரம் கிராமத்தில் உள்ள வயல்களில் மழை நீர் தேங்கி நெற்பயிர்கள் வீணாகி உள்ளது. இதனை அரசு அதிகாரிகள் யாரும் பார்வையிடவில்லை எனவும் உடனடியாக அதிகாரிகள் கணக்கீடு செய்து இழப்பீட்டுத் தொகையை உடனடியாக பெற்றுத்தர வேண்டும் எனவும் ஏக்கருக்கு ரூபாய் 50 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டமானது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க திருச்சி தெற்கு மாவட்ட செயலர் பழனிச்சாமி துணைச் செயலர் அருமை ராஜ் பிரதிநிதி கார்த்தி, தினேஷ் உள்ளிட்ட 200 விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


