தம்மம்பட்டியில் உள்ள திரையரங்குகளில், கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை புகார் எழுந்துள்ளது.
திரையரங்குகளில் 50 சதவீதம் இருக்கைக்கு அனுமதி வழங்கியதுடன், ஒவ்வொரு காட்சிக்கு கிருமி நாசினி தெளித்து இருக்கைகளை சுத்தம் செய்வதுடன், திரையரங்கிற்கு வரும் ரசிகர்களை உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும் என்பதுடன், கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. அதை கடை பிடிக்காத திரையரங்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் உள்ள இரண்டு திரையரங்குகளில், நேற்று 'மாஸ்டர்' திரைப்படம் வெளியானது. ஆனால், சிறப்பு காட்சி முதலே, கரோனா பரவல் தடுப்பு முறைகள் என, சமூக இடைவெளியை பின்பற்றாமல், 100 சதவிகிதம் பார்வையாளர்கள் முக கவசம் இல்லாமல், திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், ஒவ்வொரு காட்சியின் போதும் இருக்கைகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


