சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சேலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சங்ககிரி வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு தேநீர், காபி, பன் வழங்கும் நிகழ்ச்சி லாரி உரிமையாளர்கள் சங்க வெள்ளிவிழா கட்டட வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் தை மாதம் 1-ஆம் தேதியையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பழனி முருகன் கோயிலுக்கு சங்ககிரி வழியாக வியாழக்கிழமை அதிகாலை முதல் பாதயாத்திரையாக சென்றனர்.
பாதயாத்திரையாக சென்றவர்களுக்கு சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வி.செல்வராஜ், செயலர் கே.கே.நடேசன், பொருளாளர் என்.மோகன்குமார், உபத்தலைவர் ஆர்.ஆர்.மோகன்குமார், இணைச்செயலர் எம்.சின்னதம்பி, நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து சங்கத்தின் சார்பி தேநீர், நாட்டுச்சர்க்கரை தேநீர், காபி, பன் ஆகியவற்றை வழங்கினர்.
பின்னர் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இரவில் நடந்து செல்லும் போது பாதுகாப்பாக கோயிலுக்கு செல்ல வேண்டி ஒவ்வொருவரின் பைகளிலும் லாரிகளுக்கு ஓட்டப்படும் தரமான சிகப்பு நிற வில்லையை ஓட்டி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது குறித்து அறிவுறுத்தினர்.
லாரி உரிமையாளர்கள் சங்க கட்டிட வளாகத்தில் பாதயாத்திரையாக வருபவர்கள் அமர்ந்து ஓய்வு எடுத்து செல்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட நாற்காலிகளை வைத்திருந்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


