உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தை திங்கள் முதல் நாளான இன்று அதிகாலை முதலே விவசாய பெருமக்கள் வீடுகளில் வண்ணத் தோரணங்களைக் கட்டி புதுப் பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை வணங்கினர்.
இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் இந்த திருநாளில், ஏராளமான மக்கள் புதுப்பானையில் மஞ்சள் குங்குமமிட்டு பச்சரிசி பொங்கலிட்டு வழிபாடு செய்து வருகின்றனர்.
வீடுகளில் வண்ணக் கோலங்கள், வண்ணத் தோரணங்கள், கரும்பு உள்ளிட்டவை கொண்டு அலங்கரித்து புத்தாடை அணிந்து பொங்கல் திருநாளை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
பொங்கல் திருநாளையொட்டி அதிகாலை முதலே கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சந்தைகளில் பொங்கல் திருநாள் வியாபாரங்களும் களைகட்டியுள்ளன.
மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, பாரம்பரிய நடனம், வழுக்கு மரமேறுதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


