மதுரை: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை காண காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருவதில் மகிழ்ச்சி என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை இன்று காலை 8.10 மணியளவில் அமைச்சர் செல்லூர் ராஜு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா காரணமாக ஜல்லிக்கட்டு நடக்குமா நடக்காதா என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் குழப்பத்தில் இருந்த நேரத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடந்த முதல்வரும், துணை முதல்வரும் அனுமதி கொடுத்தனர்.
தேசிய கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழரின் பாரம்பரிய விளையாட்டை பார்க்க வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தேசிய தலைவர்கள் யார் வேண்டுமானாலும் தமிழகத்திற்கு வந்து செல்ல முடிகிறது.
தேர்தல் நேரத்தில் சிலர் ஏன் விளையாட்டை பார்க்க வருகின்றனர் என்பது மக்களுக்கு தெரியும். அரசியல் உள்நோக்கத்துடன் விளையாட்டை அணுக கூடாது என்று கூறினார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


