அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாட்டை முதலில் அவிழ்த்து விடுவதில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்து விடுவதில் நடந்த சண்டையில் இருவருக்கு கத்திக்குத்து, கரடிக்கல் பெருமாள்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார்(27), தேவேந்திரன் (25).
இவர்கள் இருவரும் ஜல்லிக்கட்டு போட்டிக்களத்தில் தங்கள் மாட்டை அவிழ்த்து விடுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த பொழுது, மாட்டின் உரிமையாளர்களுக்குள் முன்னெடுத்து விடுவதில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கும் கத்திகுத்து ஏற்பட்டது.
தொடர்ந்து அவர்கள் இருவரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். இருவருக்கும் காயம் பலமாக ஏற்பட்ட காரணத்தால் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சம்பவம் குறித்து ஒருவரை காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


