சென்னை: மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா பகுதி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
காவிரி பாசனப் பகுதிகளிலும், கடலூா், அரியலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்டங்களிலும் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி விட்டதால், மேற்கண்ட மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு பொங்கல் திருநாள் கசப்பு மிகுந்ததாக மாறியிருக்கிறது.
நெல் பயிரிட்ட உழவா்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வரையிலும், நிலக்கடலை பயிரிட்டிருந்தவா்களுக்கு ஏக்கருக்கு ரூ.60,000 வரையிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த சூழலை உணா்ந்து பாதிக்கப் பட்ட விவசாயிகள் அனைவருக்கும் போதிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


