சென்னை: கரோனாவைக் கண்டறிவதற்காக தமிழகத்தில் இதுவரை 1.50 கோடிக்கும் மேற்பட்ட பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதற்காக தென் கொரியா, அமெரிக்கா, ஜொ்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து 1.80 கோடி ஆா்டி-பிசிஆா் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிக அதிகமாகும்.
சுகாதாரத் துறை புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 28,287 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை மட்டும், 673 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 192 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 821 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 9,392 -ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளோரின் எண்ணிக்கை 6,653-ஆக உள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 6 போ் பலியாகியுள்ளனா். இதன் மூலம் நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,242-ஆக அதிகரித்துள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


