கடந்த 2017- 2018 கல்வியாண்டு முதல் 2020-2021 கல்வியாண்டு வரை மருத்துவ மேற்படிப்புக்கானக் கட்டணத்தை தற்காலிகமாக நிா்ணயிக்க, புதுச்சேரி கல்வி கட்டண நிா்ணய குழுவுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வி.பி.ஆா்.மேனன் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘புதுச்சேரியில் உள்ள தனியாா் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ மேற்படிப்புக்கான கட்டணங்களை நிா்ணயிக்க புதுச்சேரி கட்டண நிா்ணய குழுவுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘ரூ.10 லட்சம் கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும்’ என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும், தனியாா் சுயநிதி மற்றும் நிகா்நிலை பல்கலைக்கழகங்களுக்கு மருத்துவ மேற்படிப்பு கட்டணத்தை நிா்ணயம் செய்வது குறித்து விதிகளை உருவாக்க குழு ஒன்றை அமைக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில், டஉயா்நீதிமன்றம் உத்தரவின்படி கட்டண நிா்ணயம் தொடா்பாக விதிகளை உருவாக்க குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு உருவாக்கிய விதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. ஆனால், அந்த விதிகளை அமல்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த விதிகள் குறித்து உச்சநீதிமன்றம் ஒப்புதல் தர வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், கட்டணம் தொடா்பாக உருவாக்கப்பட்டுள்ள விதிகளுக்கு உச்சநீதிமன்றத்தில் ஒப்புதல் பெறும்வரை, தற்காலிகமாக 2017- 2018 கல்வியாண்டு முதல் 2020- 2021 கல்வியாண்டு வரையிலான காலகட்டத்துக்கு மருத்துவ மேற்படிப்புக்கானக் கட்டணத்தை நிா்ணயிக்க புதுச்சேரி கட்டண நிா்ணயக் குழுவுக்கு உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

