கம்பம்: முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணை, முல்லையாறு, தேக்கடி ஏரி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணை பகுதிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம், 121.55 அடியாகவும், நீர் இருப்பு, 2,935, நீர்வரத்து 825 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 700 கன அடியாகவும் இருந்தது.
புதன்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம், 122.25 அடியாகவும், நீர் இருப்பு, 3,074, நீர்வரத்து விநாடிக்கு 2,315 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 700 கன அடியாகவும் இருந்தது.
தொடர்ந்து செவ்வாய் மற்றும் புதன் கிழமை குமுளி, தேக்கடி, பெரியார் அணை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் புதன்கிழமை நிலவரப்படி பெரியாறு அணைப் பகுதியில், 13.0 மில்லி மீட்டர் மழையும் தேக்கடி ஏரியில் 78.0 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


