உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் நெற்பயிர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு பாசன நீர் மூலமாக மாவட்டத்தில் 14 ,700 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது முதல் போக சாகுபடி நெற்பயிர் மாவட்டத்தின் பல இடங்களில் அறுவடை பணி நடைபெற்று வருகிறது.
ஆனால், உத்தமபாளையம் அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி போன்ற பகுதிகளில் 2000 ஏக்கரில் விளைவிக்கப்பட்ட நெற்பயிர் அறுவடைக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாத நெற்கதிர்கள் கீழே சாய்ந்து தண்ணீரில் மூழ்கி விட்டன.
அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


