சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கொட்டும் மழையில் முல்லைப் பெரியாறு அணையில் துணைக்குழுவினர் ஆய்வு

4 மாத காலத்திற்குப் பிறகு முல்லைப்பெரியாறு அணையில் கொட்டும் மழையில் மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

News image

கொட்டும் மழையில் முல்லைப் பெரியாறு அணையில் துணைக்குழுவினர் ஆய்வு

Updated On :13 ஜனவரி 2021, 6:21 pm

கம்பம்: 4 மாத காலத்திற்குப் பிறகு முல்லைப்பெரியாறு அணையில் கொட்டும் மழையில் மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

மத்திய துணைக்குழுத் தலைவரும், மத்திய நீர் வள ஆதார செயற்பொறியாளருமான சரவணக் குமார் தலைமையில், தமிழக அரசு தரப்பில் அணையின் செயற் பொறியாளர் சாம் இர்வின், உதவிகோட்ட பொறியாளர் குமார், கேரள அரசு தரப்பில் கட்டப்பனை பொதுப்பணித்துறை அலுவலக செயற்பொறியாளர் பினுபேபி, உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் புதன்கிழமை தேக்கடி ஏரிக்கு வந்தனர். அப்போது பலத்த மழை பெய்தது. 

தேக்கடி ஏரியில் இருந்து படகு மூலமாக கொட்டும் மழையில் முல்லை பெரியாறு அணைப் பகுதிக்கு சென்று ஆய்வுகள் நடத்தினர்.